TNPSC குரூப் 4 · புதிய பாடத்திட்டம் 2026 · பாடக்குறியீடு: 496

TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம் 2026 (Syllabus in Tamil) — அலகு வாரியான வினாக்கள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

TNPSC குரூப் 4 (Combined Civil Services Examination–IV) தேர்வு (பாடக்குறியீடு: 496) என்பது 3 மணி நேரம் கால அளவு கொண்ட, 300 மதிப்பெண்களுக்கான 200 கேள்விகளை உள்ளடக்கிய, பத்தாம் வகுப்பு (SSLC) தரத்திலான ஒரே ஒரு கட்டமாக நடத்தப்படும் கொள்குறி வகை (Objective Type) எழுத்துத் தேர்வாகும். அதன் தேர்வு முறை பின்வருமாறு:

தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் திட்டம் (Exam Pattern & Marking Scheme)

  • மொத்த கேள்விகள்: 200 கொள்குறி வகை கேள்விகள் (MCQs)
  • மொத்த மதிப்பெண்கள்: 300 மதிப்பெண்கள்
  • தேர்வு கால அளவு: 3 மணி நேரம்
  • குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்: 90 மதிப்பெண்கள்
  • தேர்வு முறை (Mode of Examination): ஒளிக்குறி உணரி (OMR)
  • எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking): இல்லை
TNPSC குரூப் 4 தேர்வுமுறைத் திட்டம் — பத்தி 6 (தமிழ்ப் பக்கம் 23 / ஆங்கிலப் பக்கம் 20)
பகுதிபாடம்கேள்விகளின் எண்ணிக்கைமதிப்பெண்கள்தரம்
பகுதி-அதமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு*100150பத்தாம் வகுப்பு (SSLC)
பகுதி-ஆபொது அறிவு (General Studies)75112.5 (பகுதி ஆ + இ சேர்த்து 150)பத்தாம் வகுப்பு (SSLC)
பகுதி-இதிறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability)2537.5 (பகுதி ஆ + இ சேர்த்து 150)பத்தாம் வகுப்பு (SSLC)
மொத்தம்ஒரே வினாத்தாள் (Single Paper)200300பத்தாம் வகுப்பு (SSLC)

*குறிப்பு: பகுதி-அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு) பகுதியில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசைக்கு (Ranking) எடுத்துக்கொள்ளப்படும் (பத்தி 6.1). மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களான 40% (அதாவது 60 மதிப்பெண்கள்) பெறுவது கட்டாயமாகும்.

TNPSC குரூப் 4 அலகு வாரியான விரிவான பாடத்திட்டம் (Unit-wise Detailed Syllabus)

தேர்வர்கள் தங்களின் பயிற்சிகளை எளிமையாக்குவதற்காக, புதிய பாடத்திட்டத்தின் அனைத்து பிரிவுகளும் கீழே அலகுகளாக பிரிக்கப்பட்டு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது:

TNPSC குரூப் 4 பகுதி-அ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (Part-A: Tamil Syllabus)

பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard) கொண்ட இந்த கட்டாயத் தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் (Part-A: Tamil Eligibility-cum-Scoring Test) மொத்தம் 100 வினாக்கள் (150 மதிப்பெண்கள்) தமிழில் மட்டுமே கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% (60 மதிப்பெண்கள்) பெற்றுத் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். மேலும், இப்பகுதியில் நீங்கள் பெறும் முழு மதிப்பெண்களும் உங்களது இறுதித் தரவரிசைக்குக் (Final Ranking) கணக்கில் கொள்ளப்படும்.

பொதுத் தமிழ் பாடத்திட்ட அலகுகள் மற்றும் வினாப் பகிர்வு (Unit-wise Questions)
அலகு (Unit)அலகின் பெயர்ஆங்கிலத் தலைப்புவினாக்கள் (Questions)
Iஇலக்கணம்Grammar25
IIசொல்லகராதிVocabulary15
IIIஎழுதும் திறன்Writing skills15
IVகலைச் சொற்கள்Technical terms10
Vவாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்Reading – comprehension15
VIஎளிய மொழி பெயர்ப்புSimple translation5
VIIஇலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்Literature, Tamil scholars and service to Tamil15
மொத்த வினாக்கள் (Total Questions)100

A-I: இலக்கணம் — 25 வினாக்கள்

  • பிரித்து எழுதுதல்; சேர்த்து எழுதுதல்.
  • சந்திப்பிழை அறிதல்.
  • குறில், நெடில் வேறுபாடு அறிதல்.
  • லகர, ளகர, ழகர வேறுபாடு அறிதல்.
  • னகர, ணகர வேறுபாடு அறிதல்.
  • ரகர, றகர வேறுபாடு அறிதல்.
  • இனவெழுத்துகள் அறிதல்.
  • சுட்டு எழுத்துகள்; வினா எழுத்துகள் அறிதல்.
  • ஒருமை, பன்மை அறிதல்.
  • வேர்ச்சொல் அறிதல்.
  • வேர்ச்சொல்லிலிருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் ஆகியவற்றின் வகைகளை அறிதல்.
  • அயற்சொல், தமிழ்ச்சொல் அறிதல்.
  • எதிர்ச்சொல்; வினைச்சொல் அறிதல்.
  • எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல்.
  • இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

A-II: சொல்லகராதி — 15 வினாக்கள்

  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
  • ஓரெழுத்து ஒருமொழி அறிதல்.
  • உரிய பொருளைக் கண்டறிதல்.
  • ஒருபொருள் தரும் பல சொற்கள்; ஒருபொருட் பன்மொழி அறிதல்.
  • பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
  • இருபொருள் குறிக்கும் சொற்கள் அறிதல்.
  • பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு; சொல்லும் பொருளும் அறிதல்.
  • ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
  • கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல். எடுத்துக்காட்டுகள்: பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்); வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்).
  • பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல். எடுத்துக்காட்டுகள்: ஊடகம் — தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்); சமூகம் — மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்).
  • ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுதல். எடுத்துக்காட்டுகள்: புதுச்சேரி — புதுவை; மன்னார்குடி — மன்னை; மயிலாப்பூர் — மயிலை.
  • பிழை திருத்துதல்: ஒரு — ஓர் போன்ற பயன்பாடுகள்.
  • பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல். எடுத்துக்காட்டுகள்: வெத்தில — வெற்றிலை; நாக்காலி — நாற்காலி.
  • பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம். எடுத்துக்காட்டு: நேத்து மழ பேஞ்சுது — நேற்று மழை பெய்தது.
  • சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்.
  • அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்: எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு.
  • இணைப்புச் சொல் எடுத்துக்காட்டுகள்: நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன்; மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன்; தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்.
  • பொருள் தரும் ஓர் எழுத்து. எடுத்துக்காட்டுகள்: ஆ — பசு; ஈ — கொடு; தை — மாதம்; தீ — நெருப்பு.
  • பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக. எடுத்துக்காட்டு: கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் ஆகிய சொற்கள் தாமரையைக் குறிக்கும்.

A-III: எழுதும் திறன் — 15 வினாக்கள்

  • சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்.
  • தொடர் வகைகள் அறிதல்.
  • செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்.
  • தன்வினை, பிறவினை அறிதல்.
  • ஒருமை, பன்மை பிழையறிந்து சரியான தொடரை அமைத்தல்.
  • மரபுத் தமிழ்: திணை மரபு - எடுத்துக்காட்டுகள்:
    • உயர்திணை: அம்மா வந்தது — அம்மா வந்தாள்
    • அஃறிணை: மாடுகள் நனைந்தது — மாடுகள் நனைந்தன
  • பால் மரபு — ஆண்பால்: அவன் வந்தது — அவன் வந்தான்.
  • பெண்பால்: அவள் வந்தது — அவள் வந்தாள்.
  • பலர் பால்: அவர்கள் வந்தார்கள் — அவர்கள் வந்தனர்.
  • ஒன்றன் பால்: அது வந்தன — அது வந்தது.
  • பலவின் பால்: பறவைகள் பறந்தனர் — பறவைகள் பறந்தன.
  • காலம். எடுத்துக்காட்டுகள்: நேற்று மழை பெய்யும் — நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் — நேற்று வந்தேன்.
  • இளமைப் பெயர்: பசு — கன்று; ஆடு — குட்டி.
  • ஒலிமரபு: நாய் கத்தியது — நாய் குரைத்தது.
  • வினைமரபு: கூடைமுடை; சோறு உண்.
  • தொகை மரபு: மக்கள் கூட்டம்; ஆட்டு மந்தை.
  • நிறுத்தல் குறியீடுகள்: காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.

A-IV: கலைச் சொற்கள் — 10 வினாக்கள்

  • அறிவியல் சார்ந்த கலைச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் அறிதல்.
  • கல்வி, மருத்துவம், மேலாண்மை சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்.
  • சட்டம், புவியியல் சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்.
  • தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலைச் சொற்கள் அறிதல்.
எடுத்துக்காட்டுகள்
  • search engine — தேடு பொறி.
  • Migration — வலசை.
  • Allergy — ஒவ்வாமை.
  • Gene — மரபணு.
  • Nautical Mile — கடல் மைல்.

A-V: வாசித்தல் — புரிந்து கொள்ளும் திறன் — 15 வினாக்கள்

  • கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
  • செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றை வாசித்துப் புரிந்து கொள்ளுதல்.
  • உவமைத் தொடரின் பொருளறிதல்.
  • மரபுத் தொடரின் பொருளறிதல்.
  • பழமொழிகளின் பொருளறிதல்.
  • ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளுதல்.

A-VI: எளிய மொழி பெயர்ப்பு — 5 வினாக்கள்

  • ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்.
  • பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல். எடுத்துக்காட்டுகள்: pendrive, printer, computer, keyboard.
  • ஆவணங்களின் தலைப்புகளை மொழிபெயர்த்தல்.
  • கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ளுதல்.

A-VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் — 15 வினாக்கள்

  • திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள்: குறிப்பிடப்பட்டுள்ள இருபது அதிகாரங்கள் மட்டும்.
திருக்குறள் அதிகாரங்கள்
  • ஒழுக்கமுடைமை.
  • பொறையுடைமை.
  • ஊக்கமுடைமை.
  • விருந்தோம்பல்.
  • அறன் வலியுறுத்தல்.
  • ஈகை.
  • பெரியாரைத் துணைக்கோடல்.
  • வினைசெயல்வகை.
  • அவையஞ்சாமை.
  • கண்ணோட்டம்.
  • அன்புடைமை.
  • கல்வி.
  • நடுநிலைமை (நடுவுநிலைமை).
  • கூடா ஒழுக்கம்.
  • கல்லாமை.
  • செங்கோன்மை.
  • பண்புடைமை.
  • நட்பாராய்தல்.
  • புறங்கூறாமை.
  • அருளுடைமை.
அறநூல் தொடர்பான செய்திகள்
  • நாலடியார்.
  • நான்மணிக்கடிகை.
  • பழமொழி நானூறு.
  • முதுமொழிக்காஞ்சி.
  • திரிகடுகம்.
  • இன்னாநாற்பது.
  • சிறுபஞ்சமூலம்.
  • ஏலாதி.
  • அவ்வையார் பாடல்கள்.
  • தமிழின் தொன்மை, சிறப்பு தொடர்பான செய்திகள்.
  • திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
தமிழ்ப்பணி தொடர்பான அறிஞர்கள்
  • உ.வே.சாமிநாத ஐயர்.
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்.
  • சி.இலக்குவனார்.
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
  • தேவநேய பாவாணர்; அகரமுதலி.
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
  • ஜி.யு.போப்.
  • வீரமாமுனிவர்.
தமிழ்ச் சான்றோர்
  • பாவேந்தர்.
  • டி.கே.சிதம்பரனாதர் (டி.கே.சிதம்பரநாதர்).
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • கண்ணதாசன்.
  • காயிதே மில்லத்.
  • தாரா பாரதி.
  • வேலுநாச்சியார்.
  • பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.
  • முடியரசன்.
  • தமிழ் ஒளி.
  • உருத்திரங்கண்ணனார்.
  • கி.வா.ஜகந்நாதர்.
  • நாமக்கல் கவிஞர்.
  • அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.

TNPSC குரூப் 4 பகுதி-ஆ: பொது அறிவு (Part-B: General Studies Syllabus)

பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard) கொண்ட இப்பொது அறிவுப் பகுதியில் மொத்தம் 75 வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேட்கப்படும். அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் அலகுகள் V மற்றும் VI-க்கு தலா 20 வினாக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; இரண்டுக்கும் சேர்த்து 40 வினாக்கள்.

பொது அறிவு பாடத்திட்ட அலகுகள் மற்றும் வினாப் பகிர்வு (Unit-wise Questions)
அலகு (Unit)அலகின் பெயர்வினாக்கள் (Questions)
Iபொது அறிவியல் (General Science)5
IIபுவியியல் (Geography)5
IIIஇந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History, Culture of India, and Indian National Movement)10
IVஇந்திய ஆட்சியியல் (Indian Polity)15
Vஇந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy and Development Administration in Tamil Nadu)20
VIதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu)20
மொத்த வினாக்கள் (Total Questions)75

B-I: பொது அறிவியல் — 5 வினாக்கள்

  • பேரண்டத்தின் இயல்பு.
  • இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்.
  • இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள்; விசை, அழுத்தம், ஆற்றல்.
  • அன்றாட வாழ்வில் இயந்திரவியலின் அடிப்படைக் கோட்பாடுகளும் அவற்றின் பயன்பாடுகளும்.
  • அன்றாட வாழ்வில் மின்னியல், காந்தவியல் அடிப்படைக் கோட்பாடுகளும் பயன்பாடுகளும்.
  • ஒளி, ஒலி, வெப்பம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளும் பயன்பாடுகளும்.
  • அணுக்கரு இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளும் பயன்பாடுகளும்.
  • தனிமங்களும் சேர்மங்களும்.
  • அமிலங்கள், காரங்கள், உப்புகள்.
  • பெட்ரோலியப் பொருட்கள்.
  • உரங்கள், பூச்சிக்கொல்லிகள்.
  • உலோகவியல்; உணவில் கலப்படம்.
  • உயிரியலின் முக்கியக் கோட்பாடுகள்.
  • உயிரினங்களின் வகைப்பாடு.
  • பரிணாமம்; மரபியல்.
  • உடலியல்; ஊட்டச்சத்து.
  • உடல்நலம், சுகாதாரம், மனித நோய்கள்.
  • சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்.
  • நடப்பு நிகழ்வுகள்.

B-II: புவியியல் — 5 வினாக்கள்

  • புவியின் அமைவிடம்; இயற்கை அமைவுகள்.
  • பருவமழை, மழைப்பொழிவு, வானிலை, காலநிலை.
  • நீர்வளங்கள்; ஆறுகள்.
  • மண், கனிம வளங்கள், இயற்கை வளங்கள்.
  • காடு மற்றும் வன உயிரினங்கள்.
  • வேளாண் முறைகள்.
  • போக்குவரத்து; தகவல் தொடர்பு.
  • தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
  • பேரிடர்; பேரிடர் மேலாண்மை.
  • சுற்றுச்சூழல்; பருவநிலை மாற்றம்.
  • புவியியல் அடையாளங்கள்.
  • நடப்பு நிகழ்வுகள்.

B-III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள்

  • சிந்து சமவெளி நாகரிகம்.
  • குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள்.
  • தென் இந்திய வரலாறு.
  • தேசிய மறுமலர்ச்சி.
  • ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்.
  • இந்திய தேசிய காங்கிரஸ்.
  • தலைவர்கள் உருவாதல்: பி.ஆர்.அம்பேத்கர்.
  • பகத்சிங்.
  • பாரதியார்.
  • வ.உ.சிதம்பரனார்.
  • தந்தை பெரியார்.
  • ஜவஹர்லால் நேரு.
  • ரவீந்திரநாத் தாகூர்.
  • காமராசர்.
  • மகாத்மா காந்தி.
  • மெளலானா அபுல் கலாம் ஆசாத்.
  • இராஜாஜி.
  • சுபாஷ் சந்திர போஸ்.
  • முத்துலட்சுமி அம்மையார்.
  • மூவலூர் இராமாமிர்தம்.
  • பாடத்திட்டத்தில் குறிப்பிடப்படும் பிற தேசத் தலைவர்கள்.
  • தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்.
  • இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை: இனம், மொழி, வழக்காறு.
  • மதச்சார்பற்ற நாடாக இந்தியா.

B-IV: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள்

  • இந்திய அரசியலமைப்பு.
  • அரசியலமைப்பின் முகவுரை; முக்கியக் கூறுகள்.
  • ஒன்றியம், மாநிலம், யூனியன் பிரதேசங்கள்.
  • குடியுரிமை.
  • அடிப்படை உரிமைகள்.
  • அடிப்படைக் கடமைகள்.
  • அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
  • ஒன்றிய நிர்வாகம்; ஒன்றிய நாடாளுமன்றம்.
  • மாநில நிர்வாகம்; மாநிலச் சட்டமன்றம்.
  • உள்ளாட்சி அமைப்புகள்; பஞ்சாயத்து ராஜ்.
  • கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; மத்திய–மாநில உறவுகள்.
  • தேர்தல்.
  • இந்திய நீதி அமைப்புகள்.
  • சட்டத்தின் ஆட்சி.
  • பொது வாழ்வில் ஊழல்; ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்.
  • லோக்பால்; லோக் ஆயுக்தா.
  • தகவல் அறியும் உரிமை.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்.
  • நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.
  • மனித உரிமைகள் சாசனம்.
  • தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைகளும்.
  • நடப்பு நிகழ்வுகள்.

B-V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள்

  • இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்.
  • ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள்: ஒரு மதிப்பீடு.
  • திட்டக்குழு; நிதி ஆயோக்.
  • வருவாய் ஆதாரங்கள்.
  • இந்திய ரிசர்வ் வங்கி.
  • நிதி ஆணையம்.
  • மத்திய–மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு.
  • சரக்கு மற்றும் சேவை வரி.
  • பொருளாதாரப் போக்குகள்.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்.
  • நிலச் சீர்திருத்தங்கள்; வேளாண்மை.
  • வேளாண்மையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு.
  • தொழில் வளர்ச்சி.
  • ஊரக நலன்சார் திட்டங்கள்.
  • சமூகப் பிரச்சினைகள்: மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.
  • சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்களாக சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும்.
  • தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
  • தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
  • அரசின் நலன்சார் திட்டங்கள்.
  • தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.
  • நடப்பு நிகழ்வுகள்.

B-VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக–அரசியல் இயக்கங்கள் — 20 வினாக்கள்

  • தமிழ்ச் சமுதாய வரலாறும் அதனுடன் தொடர்புடைய தொல்லியல் கண்டுபிடிப்புகளும்.
  • சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.
திருக்குறள்
  • மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் என்ற சிறப்பு.
  • அன்றாட வாழ்வியலுடன் திருக்குறளின் தொடர்பு.
  • மனிதகுலத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
  • திருக்குறளும் மாறாத விழுமியங்களும்.
  • சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
  • தத்துவக் கோட்பாடுகள்.
  • விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு.
  • ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்ககாலக் கிளர்ச்சிகள்.
  • விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
  • தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள்.
  • தமிழ்நாட்டின் சீர்திருத்த இயக்கங்களும் சமூக மாற்றங்களும்.

TNPSC குரூப் 4 பகுதி-இ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Part-C: Aptitude & Mental Ability)

பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard) கொண்ட இந்தத் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Part-C: Aptitude and Mental Ability) கணிதம் மற்றும் காரணவியல் பகுதியில் மொத்தம் 25 வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேட்கப்படும். இப்பகுதி தேர்வர்களின் கணிதத் திறன் மற்றும் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறனைச் சோதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கணிதம் மற்றும் காரணவியல் அலகுகள் - வினாப் பகிர்வு (Unit-wise Questions)
அலகு (Unit)அலகின் பெயர்வினாக்கள் (Questions)
Iதிறனறிவு (Aptitude)15
IIகாரணவியல் (Reasoning)10
மொத்த வினாக்கள் (Total Questions)25

C-I: திறனறிவு — 15 வினாக்கள்

  • சுருக்குதல்.
  • விழுக்காடு.
  • மீப்பெரு பொதுக் காரணி (HCF).
  • மீச்சிறு பொது மடங்கு (LCM).
  • விகிதம் மற்றும் விகிதாச்சாரம்.
  • தனிவட்டி.
  • கூட்டுவட்டி.
  • பரப்பு.
  • கொள்ளளவு.
  • காலம் மற்றும் வேலை.

C-II: காரணவியல் — 10 வினாக்கள்

  • தருக்கக் காரணவியல்.
  • புதிர்கள்.
  • பகடை.
  • காட்சிக் காரணவியல்.
  • எண்–எழுத்துக் காரணவியல்.
  • எண் வரிசை.

மொத்த வினாக்கள் கணக்கீடு (Total Weightage Analysis)

பகுதி-அ தமிழ் (100) + பகுதி-ஆ பொது அறிவு (75) + பகுதி-இ திறனறிவு (25) = மொத்தம் 200 வினாக்கள் (300 மதிப்பெண்கள்) — பிற்சேர்க்கை III.

பகுதி அ · சிறப்பு விலக்கு · பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard)

மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கான பொது ஆங்கிலம் (General English)

வினாக்கள்100Questions
மதிப்பெண்கள்150Marks
தகுதி மதிப்பெண்6040% · Part A
தரம்SSLC10th standard

பொது ஆங்கிலம்: அலகு வாரியான வினாப் பகிர்வு

TNPSC Annexure III · General English · 100 questions
அலகுபிரிவுவினாக்கள்
IGrammar25
IIVocabulary15
IIIWriting Skills10
IVTechnical Terms10
VReading Comprehension20
VITranslation5
VIILiterary Works15
மொத்தம்100

General English: Detailed Syllabus (SSLC Standard)

Unit I: Grammar 25 Questions

  • Parts of speech, concord and tense.
  • Active and passive voice; statements, interrogatives, imperatives and exclamatory sentences.
  • Transformation between sentence forms, including affirmative, negative, interrogative and exclamatory constructions.
  • Main and auxiliary verbs; regular and irregular verbs; infinitives, gerunds and participles.
  • Question tags, sentence patterns, simple, compound and complex sentences.
  • Phrases and clauses; degrees of comparison (positive, comparative and superlative).
  • Direct and indirect speech; synthesis of sentences; punctuation.

Unit II: Vocabulary 15 Questions

  • Synonyms, antonyms, homonyms, homophones and collocations.
  • Idioms, phrases and phrasal verbs.
  • Spelling, correct word usage, one-word substitution and word creation.
  • Singular and plural forms (including zero plural), derivatives and abbreviations.
  • British and American English; compound words and figures of speech.

Unit III: Writing Skills 10 Questions

  • Formal and informal letter writing; types of letters (multiple-choice questions).
  • Jumbled sentences and finding the correct order of sentences.
  • Making queries (MCQs), inferences, blanks and substitutions.

Unit IV: Technical Terms 10 Questions

  • Administrative, department-related, general and official terms.
  • Basics of official correspondence.

Unit V: Reading Comprehension 20 Questions

  • Unseen passages from newspapers, headlines, editorials and government-related news.
  • Strong and weak question types, match the following and sentence completion.
  • Ascertainment of facts (MCQs) and choosing the best response.

Unit VI: Translation 5 Questions

  • Word and sentence translation.
  • Tense-related translation tasks and tense/voice-related tasks.

Unit VII: Literary Works 15 Questions

Figures of speech, appreciation and analysis of poetry, and lines of significance. Unit VII is based on school textbooks up to SSLC Standard.

Prescribed Poems (30)
  1. I Dream of Spices — Raj Arumugam
  2. The Crocodile — Lewis Carroll
  3. Teamwork — Edgar Albert Guest
  4. From a Railway Carriage — Robert Louis Balfour Stevenson
  5. A Tragic Story — William Makepeace Thackeray
  6. Sea Fever — John Masefield
  7. Courage — Edgar Albert Guest
  8. The Age of Chivalry — George Krokos
  9. Wandering Singers — Sarojini Naidu
  10. The Listeners — Walter de la Mare
  11. Your Space — David Bates
  12. Special Hero — Christine M. Kerschan
  13. Stopping by Woods on a Snowy Evening — Robert Frost
  14. Leisure — William Henry Davies
  15. A Poison Tree — William Blake
  16. The Power of a Smile — Tupac Shakur
  17. On Killing a Tree — Gieve Patel
  18. Advice from a Tree — Ilan Shamir
  19. The Spider and the Fly — Mary Howitt
  20. Never Trust a Mirror — Erin Hanson
  21. The River — Ilan Shamir
  22. Nature the Gentlest Mother — Emily Dickinson
  23. The Comet — Norman Littleford
  24. The Star — Jane Taylor
  25. The Stick-Together Families — Edgar Albert Guest
  26. Memories of My Dad — Rebecca D. Cook
  27. Life — Henry Van Dyke
  28. The Grumble Family — L. M. Montgomery
  29. The Secret of the Machines — Rudyard Kipling
  30. The House on Elm Street — Naida Bush
Prescribed Prose and Drama (29)
  1. His First Flight — Liam O’Flaherty
  2. The Night the Ghost Got In — James Grover Thurber
  3. Empowered Women Navigating the World
  4. The Attic — Satyajit Ray
  5. Tech Bloomers
  6. The Last Lesson — Alphonse Daudet
  7. The Dying Detective — Arthur Conan Doyle
  8. Learning the Game — Sachin Ramesh Tendulkar
  9. I Can’t Climb Trees Anymore — Ruskin Bond
  10. Old Man River — Dorothy Deming (Drama)
  11. Seventeen Oranges — Bill Naughton
  12. Water — The Elixir of Life — Sir C. V. Raman
  13. From Zero to Infinity — Biography of Srinivasa Ramanujan
  14. A Birthday Letter — Jawaharlal Nehru
  15. The Nose Jewel — C. Rajagopalachari
  16. Hobby — Turns a Successful Career
  17. Sir Isaac Newton — The Ingenious Scientist — Nathaniel Hawthorne
  18. My Reminiscence — Rabindranath Tagore
  19. Sea Turtles — Shekar Dattatri
  20. When the Trees Walked — Ruskin Bond
  21. A Visitor from Distant Lands
  22. Sports Stars — Mithali Dorai Raj
  23. The Last Stone Carver — Sigrun Srivastav
  24. Eidgah — Munshi Premchand
  25. The Wind on Haunted Hill — Ruskin Bond
  26. A Prayer to the Teacher — Subroto Bagchi
  27. The Tempest — Tales from Shakespeare
  28. A Hunter Turned Naturalist — Jim Corbett
  29. The Cat and the Painkiller (An Extract from the Adventures of Tom Sawyer) — Mark Twain

ஆதாரம்: TNPSC அறிவிப்பு எண் 11/2026, பிற்சேர்க்கை III (Annexure III), தமிழ்ப் பக்கம் 69 (92-இல்) / ஆங்கிலப் பக்கங்கள் 63–64 (85-இல்). தகுதி மற்றும் ஆவண நிபந்தனைகளுக்கு முழு அறிவிப்பின் பத்தி 6.2-ஐப் பார்க்கவும். TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. 2026–2027 குரூப் 4 தேர்விற்கு எந்த அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?

இந்தத் தேர்விற்கு TNPSC அறிவிப்பு எண் 11/2026-ன் பிற்சேர்க்கை III-ல் (Annexure III) வெளியிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தையே முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இதில் பகுதி அ — தமிழ் (100 வினாக்கள்), பகுதி ஆ — பொது அறிவு (75 வினாக்கள்), மற்றும் பகுதி இ — திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (25 வினாக்கள்) என 200 வினாக்களுக்கும் அலகு வாரியாகப் பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: TNPSC அறிவிப்பு எண் 11/2026, பிற்சேர்க்கை III (தமிழ்ப் பக்கங்கள் 67–71; ஆங்கிலப் பக்கங்கள் 62–65).

2. ஒவ்வொரு அலகிலும் (Unit) குறிப்பிடப்பட்டுள்ள அதே எண்ணிக்கையில்தான் வினாக்கள் கேட்கப்படுமா?

இல்லை, அது கட்டாயமில்லை. அறிவிப்பின் பத்தி 6.3-ன்படி, பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலகு வாரியான வினாக்களின் பகிர்மானம் உத்தேசமானது (Indicative) மட்டுமே. தேவைப்பட்டால் எந்தவொரு அலகிலும் கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கையைத் தேர்வாணையம் (TNPSC) சிறிதளவு கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

ஆதாரம்: TNPSC அறிவிப்பு எண் 11/2026, பத்தி 6.3 மற்றும் பிற்சேர்க்கை III (தமிழ்ப் பக்கங்கள் 23, 67–71; ஆங்கிலப் பக்கங்கள் 21, 62–65).

3. குரூப் 4 பாடத்திட்டத்திற்கு எந்தப் பள்ளிப் பாடப்புத்தகங்களைப் (Samacheer Kalvi Books) படிக்க வேண்டும்?

TNPSC குரூப் 4 தேர்வு முழுமையாகப் பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard) கொண்டது. குறிப்பாகப் பகுதி அ — அலகு VII (இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்) பாடத்திட்டமானது 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்விப் பள்ளிப் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது என அறிவிப்பில் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களைத் தெளிவாகப் படிப்பதுடன், பொது அறிவுத் தலைப்புகளுக்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் உள்ள தொடர்புடைய பகுதிகளையும் கூடுதலாகப் படிப்பது அதிக மதிப்பெண் பெற உதவும். தேர்வு முறை மற்றும் தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு எங்களது TNPSC குரூப் 4 தேர்வு முறை (Exam Pattern) மற்றும் தகுதி நிபந்தனைகள் (Eligibility) பக்கங்களைப் பார்க்கவும்.

ஆதாரம்: TNPSC அறிவிப்பு எண் 11/2026, பத்தி 6 மற்றும் பிற்சேர்க்கை III (தமிழ்ப் பக்கம் 68; ஆங்கிலப் பக்கம் 63).

4. TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தில் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) பகுதிக்கு எத்தனை மாதங்கள் படிக்க வேண்டும்?

புதிய பாடத்திட்டத்தில் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) என்பதற்குத் தனி அலகு கிடையாது; மாறாக பொது அறிவியல் (B-I), புவியியல் (B-II), இந்திய ஆட்சியியல் (B-IV) மற்றும் இந்தியப் பொருளாதாரம் & வளர்ச்சி நிர்வாகம் (B-V) ஆகிய அலகுகளின் கீழ் ஒரு உட்பிரிவாக இணைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய 6 முதல் 12 மாதங்கள் வரையிலான தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள், விருதுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், புவியியல் அடையாளங்கள் (GI Tags) மற்றும் முக்கிய நிகழ்வுகளை தினசரி செய்தித்தாள்கள் மற்றும் அரசு செய்திக் குறிப்புகள் (PIB / DIPR) வழியாகப் படிப்பது பயிற்சிக்கான ஒரு நடைமுறை அணுகுமுறை; TNPSC அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்ட மாத வரம்பை அறிவிக்கவில்லை.

ஆதாரம்: TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம் (பாடக்குறியீடு: 496), பகுதி ஆ — அலகுகள் I, II, IV மற்றும் V.

5. குரூப் 4 தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற பொதுத் தமிழ் (General Tamil) பாடத்திட்டத்தை எவ்வாறு படிப்பது?

பகுதி அ தமிழ் தாளில் கேட்கப்படும் 100 வினாக்களில் (150 மதிப்பெண்கள்) 95+ வினாக்களுக்கு மேல் சரியாகப் பதிலளிப்பது தரவரிசையில் (Ranking) முன்னிலை பெற மிக முக்கியமானது. புதிய பாடத்திட்டத்தில் இலக்கணம் (25), சொல்லகராதி (15), எழுதும் திறன் (15), வாசித்தல் திறன் (15), கலைச்சொற்கள் (10), எளிய மொழிபெயர்ப்பு (5) எனப் பயன்பாட்டுத் தமிழிற்கு 85 வினாக்களும், இலக்கியம் மற்றும் தமிழறிஞர்கள் (அலகு VII) பகுதிக்கு 15 வினாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வித் தமிழ் புத்தகங்களில் உள்ள மொழிப்பயிற்சிகள், இலக்கணக் குறிப்புகள், கலைச்சொற்கள் மற்றும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 20 திருக்குறள் அதிகாரங்களைத் தெளிவாகப் படித்துத் தொடர் மாதிரித் தேர்வுகளில் (Mock Tests) பயிற்சி பெற வேண்டும்.

ஆதாரம்: TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம் (பாடக்குறியீடு: 496), பகுதி அ — அலகுகள் I முதல் VII வரை.

6. புதிய பாடத்திட்டத்தின்படி திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) பகுதி எளிதாக இருக்குமா?

ஆம், இப்பகுதி பத்தாம் வகுப்புத் தரம் (SSLC Standard) கொண்டது என்பதால் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகக் கணிதப் பயிற்சிகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே 25 வினாக்களுக்கும் முறையாகப் பயிற்சி செய்ய உதவும். புதிய பாடத்திட்டத்தில் திறனறிவு (Aptitude — 15 வினாக்கள்: சுருக்குதல், விழுக்காடு, HCF, LCM, விகிதம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கொள்ளளவு, காலம் மற்றும் வேலை) மற்றும் காரணவியல் (Reasoning — 10 வினாக்கள்: தருக்கக் காரணவியல், புதிர்கள், பகடை, எண் வரிசை) எனத் தலைப்பும் வினாப் பகிர்வும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு TNPSC வினாத்தாள்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வது முழு மதிப்பெண் பெற உதவும்.

ஆதாரம்: TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம் (பாடக்குறியீடு: 496), பகுதி இ — அலகுகள் I மற்றும் II.